அதிமுகவில் இருந்து வந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அரசு பதவி!

Published On:

| By Kavi

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு முதல்வர் விஜய் முக்கிய பதவியை கொடுத்துள்ளார்.

அதிமுக ஐடி விங் தலைவர், ஐ.டி விங் மண்டல செயலாளர், மாணவர் அணி செயலாளர் என அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த சிங்கை ராமச்சந்திரன் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

ADVERTISEMENT

தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக சிங்கை ராமச்சந்திரனை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக இந்த பதவியை வகித்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share