நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று இயக்குனர் லோகேஷ் கனராஜ் இன்று (மே 1) தெரிவித்துள்ளார். lokesh kanagaraj clarifies actor
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் 10,000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், “ரெட்ரோ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இன்று இரவு படத்தை பார்க்கிறேன். என்னுடன் பணிபுரிந்த பல பேர் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அவர்களிடம் அடிக்கடி இப்படத்தின் அப்டேட் குறித்து கேட்பேன்.
இந்த படத்திற்கு நான் மிகவும் வெயிட் செய்கிறேன். நிச்சயமாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன். எங்களது கூட்டணியை நீங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.
தொடர்ந்து நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து லோகேஷ் கனராஜ் கூறும்போது, “ஸ்ரீயின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்தி என்னை மிகவும் பாதித்தது. அதனால் மூன்று மாதங்கள் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துள்ளேன். ஸ்ரீ இப்போது மிகவும் நன்றாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். lokesh kanagaraj clarifies actor