தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் காணலாம்
- 2,50,000 தென்னங்கன்றுகளை தென்னை நாற்று பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்ய இலக்கு
- மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பயிர்விதை உற்பத்தி
- மானிய விலையில் கால்நடை தீவனங்கள்; தாது உப்புக் கலவை வழங்கப்படும்
- ரூ4.19 கோடியில் சிறு பால்பண்ணை திட்டங்கள்
- அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும் போது எம்.எல்.ஏ.க்கள் சப்தமாக பேசுவதை தவிர்க்க சபாநாயகர் அறிவுறுத்தல்
- 6,14,580 விவசாயிகளிடம் இருந்து 62,72,720 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; ரூ910 கோடி ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது
- ரூ.2 கோடியில் உழவர் சந்தைகளில் மின்னணு விலை பலகைகள்
- கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்கு ரூ3 கோடியில் 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
- கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் விடுதி வசதிகள் மேம்படுத்தப்படும்
- பவானிசாகரில் மஞ்சள் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
- சாக்கோட்டையில் ‘நம்மாழ்வார்’ பெயரில் உயிர்ம வேளாண் பட்டயப் படிப்புக்கான கல்லூரி- ரூ5 கோடி மாநில நிதி.
- நீலகிரியில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ரூ10 கோடியில் வேளாண் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
- மதிப்பு கூட்டுதலை மேம்படுத்த முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்
- வேளாண் விளைபொருட்களுக்கு 100 சதவீதம் காப்பீடு
- நடப்பாண்டில் தஞ்சையில் வேளாண் கண்காட்சி நடத்தப்படும்
- 1000 விவசாயிகளுக்கு சூரிய மின்சார பம்புசெட்
- ரூ4.6 கோடியில் வேளாண் பொறியியல் விரிவாக்க மையங்கள்
- 500 இடங்களில் ரூ8.5 கோடியில் பண்ணை குட்டைகள்
- வட்டாரங்களில் 100 தோட்டக்கலை மையங்கள்
- வேலூர் அரசு பண்ணை ரூ2 கோடியில் மேம்படுத்தப்படும்.
- ரூ50 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள்
- ரூ41 கோடியில் தென்னை சிறப்பு திட்டம்
- ரூ50 லட்சம் செலவில் 50 காளான் உற்பத்தி கூடங்கள்
- ரூ.5.30 கோடியில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்
- நம்மாழ்வார்; அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் அறிவிப்பு
- புளி சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை
- ரூ1.20 கோடியில் தளிர் கீரைகள் திட்டம்
- பனை பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
- 6,000 ஏக்கரில் வாழை சாகுபடி
- ரூ41 கோடியில் தோட்டக்கலை பயிர் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை
- ரூ 9 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாடு
- ரூ15 கோடியில் பசுமை குடில்கள்
- வேளாண் கண்காட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடு
- ரூ 7 கோடியில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
- சிறுதானிய உற்பத்தியை இருமடங்காக்க ரூ7.61 கோடியில் குறுதானிய இயக்கம்
- ரூ27.21 கோடியில் 40,000 பருத்தி விவசாயிகள் பயனடையும் வகையில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்
- ரூ2 கோடியில் உழவர்களுக்கு AI செயலி
- இடுபொருட்கள் குறித்த பருவத்தில் கிடைக்கும்.
- 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு
- உயிர்ம வேளாண்மை- ரூ 8 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு ரூ4,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- ரூ600 கோடியில் மண்வள பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
- இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது; ரூ7,432 கோடி, மின்வாரியத்துக்கு வழங்கப்படும்.
- விவசாய குடும்பங்களுக்கு மகனாக இருக்கிறார் முதல்வர் விஜய்
- எல் நினோவால் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும்.
- 38 மாவட்டங்களில் ரூ648 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம்
- ரூ134 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்தார் முதல்வர் விஜய்.
- டெல்டா மாவட்டங்களில் 2509 கிமீ கால்வாய்கள் ரூ10 கோடியில் தூர் வாரப்பட்டுள்ளன.
- விவசாயிகளுக்கான திட்டங்கள் தொடரும்; புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
- உழவர் சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் வினோத்தை வேளாண் பட்ஜெட்டை மட்டும் படிக்குமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுரை
- அமைச்சர் வினோத்தின் அரசியல் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு
- தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் விசில் குறித்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத் பெருமிதம்
- பணநாயகத்தை தோற்கடித்த ‘ஜனநாயகன்’ என முதல்வர் விஜய்க்கு புகழாரம்
- சபாநாயகர் சொன்ன அதே திருக்குறளையே மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.
- வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்
- உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து- திருக்குறளுடன் சட்டசபை தொடக்கம்

- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கறுப்பு டிசர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தார்.
- அமைச்சர் வினோத், பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்



- வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து அமைச்சர் வினோத் வழிபட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது
