மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்காக பச்சை துண்டு அணிந்து சட்டசபைக்கு அமைச்சர் வினோத் வருகை தந்தார். ஏற்கனவே வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து அமைச்சர் வினோத் வழிபாடு செய்தது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
