வாயுத் தொல்லை (Gas Trouble) நீங்க எலுமிச்சை வீட்டு வைத்திய செய்முறை குறித்துப் பார்க்கலாம்.
செரிமான செயல்பாட்டின் போது குடலில் அதிகப்படியான வாயு உற்பத்தியாவதால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது.ஏப்பம், வயிறு உப்புசம், வயிற்று வலி மற்றும் ஆசனவாய் வழியாக வாயு வெளியேறுதல் ஆகியவை வாயுத் தொல்லையில் அறிகுறிகளாகும். நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக சாப்பிடுதல், உணவை வேகமாக உண்பது, செரிமானக் கோளாறுகள் மற்றும் உடற்பயிற்சி இல்லாததே வாயுத் தொல்லை (Gas Trouble) ஏற்பட முக்கிய காரணங்களாகும். அதே சமயம் ஒரு சிறிய மற்றும் எளிய வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி வாயு தொல்லையை தீர்க்கலாம். எலுமிச்சை மூலம் தயாரிக்கும் சாறு வாயு தொல்லையை சிறிது நேரத்தில் நீக்கிவிடும்.
எலுமிச்சை வீட்டு வைத்தியம்
ஒரு எலுமிச்சையை எடுத்து அதனை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இடுக்கியைப் பயன்படுத்தி, ஒரு பாதி எலுமிச்சையை நேரடியாக கேஸ் பர்னரில் வைத்துச் சூடாக்கவும். அது நன்றாகச் சூடாக வேண்டும். சூடானதும், அதை அடுப்பிலிருந்து எடுத்துவிடவும். எலுமிச்சையுடன் சிறிதளவு கருப்பு உப்பு மற்றும் சீரகப் பொடியைச் (Benefits of cumin powder) சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். அதிகமாகச் சேர்க்க வேண்டாம், ஒரு சிட்டிகை மட்டும் சேர்க்கவும். அதை கிளற வேண்டாம்.
அதிலிருந்து எலுமிச்சை (Lemon home remedy) சாற்றை மட்டும் பிடித்து எடுத்து விழுங்காமல் வாயில் வைத்திருக்கவும். உடனடியாகக் குடிப்பதற்குப் பதிலாக 2-3 நிமிடங்கள் உங்கள் நாக்கில் அப்படியே வைத்திருக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கழித்து, அது உங்கள் வாயில் தானாகவே கரைந்துவிடும். அதன் சுவை சற்று புளிப்பாக இருக்கலாம். வயிற்றுக்குள் எலுமிச்சை சாறு சென்ற பின்னர் நீங்கள் சிறிதளவு வெதுவெதுப்பான நீரையும் குடிக்கலாம்.
எலுமிச்சை சாறு ஏற்படுத்தும் நன்மைகள்
எலுமிச்சை சாறு குடித்த 2 – 3 மணி நேரத்திற்குள் உங்கள் வயிறு மிகவும் இலகுவாக உணர்வதையும், வாயு இயற்கையாகவே வெளியேறிவிடுவதையும் காண முடியும். சீரகப் பொடி, எலுமிச்சை மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கும்போது, அவை உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, செரிமான மண்டலத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் (Gut health) மேம்படுத்தி, நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் உங்கள் வயிறு இலகுவாகவும், தளர்வாகவும் உணரப்படும். வாயுத் தொல்லை இருந்தால் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.
