நீலகிரியில் மண் சரிவு… சிக்கிய அரசு பேருந்து – 150 மாணவர்களின் நிலை? திக் திக் நிமிடங்கள்

Published On:

| By Kavi

கன மழை காரணமாக நீலகிரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 150 மாணவர்களும், அரசு பேருந்து நடத்துனரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்க்கும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ADVERTISEMENT

அதன்படி நீலகிரி மாவட்டம் உதகையில் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் ஊட்டி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பர்லியாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக கோவைக்கு சென்ற அரசு பேருந்து சிக்கிக்கொண்டது.

ராட்சத மரம் விழுந்ததில் பேருந்தின் மேல் பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பேருந்துக்குள் இருந்த பயணிகளின் நிலை என்னவென்று தெரியாமல், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர், காவல்துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் மட்டுமே இருந்துள்ளனர்.

இதில் நடத்துனர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் இறந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.

இது பற்றி உதகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு பேருந்தின் நடத்துனர் கூறுகையில், “கோவைக்கு செல்லும் வழியில் பேருந்தின் மீது மரம் விழுந்துவிட்டது. இரண்டு பக்கமும் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. தண்ணீரும் கொட்டிக் கொண்டிருந்தது. முன்னதாக பயணிகள் இறங்கிவிட்டனர். நானும் ஓட்டுனரும் தான் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டோம்” என்று தெரிவித்தார்.

அதேபோன்று, கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த 150 மாணவ மாணவிகளும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரையும் கயிறு கட்டி மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குஞ்சப்பனை பகுதி சாலை, கோத்தகிரி, குணவக்கரை சாலை ஆகிய பகுதிகளில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தீட்டுக்கல் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு முதியவர் சிக்கிய நிலையில் அவரையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீலகிரிக்கு அடுத்த மூன்று நாட்கள் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share