நயன்தாராவின் 75ஆவது படம் தொடங்கியது!

Published On:

| By Gracy

நடிகை நயன்தாரா சினிமா வாழ்க்கையில் நடிக்கும் 75ஆவது படத்திற்கான அலுவலக பூஜை நேற்று நடைபெற்றது. அவரது திருமணத்திற்கு பின் புதிய படங்களில் நடிக்க ஏராளமான நிபந்தனைகளை விதித்திருக்கிறார் என இணையதளங்களில் வதந்தி செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஷங்கரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய நிலேஷ்குமார் இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் இணைந்து நடிக்கும் படம்தான் நயன்தாராவின் 75வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்லி இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் இவர்கள் மூவரும் இணைந்து நடித்தனர்.

நயனின் 75ஆவது படம் குறித்து தகவல் வெளியான பின்பு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுசம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள நிலேஷ் கிருஷ்ணா, “நிஜமாகவே என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நான் அறிமுகமாகும் முதல் படமான நயன்தாரா 75 படத்தின் பூஜை சூப்பர் ஸ்டாரின் அழைப்பில் இருந்து ஆரம்பித்தது. அவர் ஆசிர்வதித்தார், வாழ்த்தினார். இதை விட வேற என்ன வேண்டும் லவ் யூ தலைவா” என குறிப்பிட்டுள்ளார் படத்தை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share