கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ். பாபு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றார். கடந்த 9-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 12 நாட்களாக எம்ஜிஎம் மருத்துவமனையில் வி.எஸ்.பாபுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் வி.எஸ். பாபுவுக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் கருவிகள் இன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் இயல்பான நிலையில் பேசுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
