கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்

Published On:

| By christopher

Kitchen Keerthana: Viral Fish Roast
மீன் வரத்து அதிகரித்து மீன் விலை குறைந்துள்ள நிலையில் புரட்டாசி மாதத்துக்கு முன்பு அசைவ உணவுகளை ஆசையாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைப்பவர்கள், வீட்டிலேயே இந்த  ருசியான விரால் மீன் ரோஸ்ட் செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
விரால் மீன் – ஒரு கிலோ
பூண்டு – 30 கிராம்
இஞ்சி – 10 கிராம்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 15 கிராம்
கொத்தமல்லித்தழை – 5 கிராம்
மஞ்சள்தூள் – 5 கிராம்
சோம்பு – 3
சீரகம் – 2
மிளகு – 15 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 20 கிராம்
எலுமிச்சைப்பழம் – அரை பழம் (சாறு எடுக்கவும்)
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share