ஆபிஸ் போறதுக்காக இன்னைக்கு பஸ்டாப்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
வரிசையா பிள்ளையார் சிலைகளை வண்டியில வச்சி கொண்டு போயிக்கிட்டு இருந்தாங்க… தூரத்துல ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ பாட்டு கேட்டுச்சு… வேற எங்கேயாவது போட்ருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, பிள்ளையார கொண்டு போன வண்டியில தான் அந்த பாட்ட போட்டாங்க…
இத ஆச்சரியமா பார்த்தா… பின்னாடி வந்த வண்டியில ‘மச்சி ஓபன் த பாட்டில்’ பாட்டு போடுறாங்க…
’இது என்னடா பிள்ளையாருக்கு வந்த சோதனைன்னு?’ நினைச்சிக்கிட்டு இந்தப்பவே பஸ் வந்திருச்சி, அப்புறம் பஸ் ஏறி ஆபிஸ் வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
நடிகர்கள் தான் தலைமுறை தலைமுறையா
நடிக்க வர்றாங்க ன்னு பார்த்தா
நடிகர் சங்க கடனும் தலைமுறை தலைமுறையா
கூடவே தொடருது
வசந்த்
முதல்ல சுடுற தோசை சரியா வராது என்பது எழுதப்படாத விதிகளில் ஒன்று.
காளி✩⍣
மது ஒழிப்பு மாநாடு – விசிக அறிவிப்பு..
ஒரு 6 சீட்டு கிடைக்குமா…
Mannar & company™🕗
ஆரோக்கியத்துக்கு? ஆப்பிள் பழம்
ஆடம்பரத்துக்கு? ஆப்பிள் ஐபோன்!
குருநாதா
பெருசா ஆசைலாம் இல்ல
வயசான காலத்துல BP ,சுகர்-னு வராம இருந்தாலே போதும்
ச ப் பா ணி
பேரு தனிமை விரும்பி…
ஆனால் கையில மொபைல் போன்
செங்காந்தள்
ஜிஎஸ்டிக்கு மட்டும் தான் ஜிஎஸ்டி வரி இல்லை போல!
கோழியின் கிறுக்கல்!!
வாழ்வதற்கு கடவுள் தேவையில்லை,
தோல்வியின் போது பழி போடுவதற்கே தேவை!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணிப்பூர் கலவரம்… ஐந்து நாட்களுக்கு இன்டர்நெட் கட்!
தமிழகத்தில் 5,000 நீர்நிலைகள் புனரமைப்பு… ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு!