கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா

Published On:

| By christopher

Kitchen Keerthana: Cabbage Pagoda

அன்றாட சமையலுக்கு முட்டைகோஸைப் பயன்படுத்தி பொரியல், கூட்டு போன்ற உணவு வகைகளைச் செய்து ருசித்திருப்போம். அதே முட்டைகோஸில் மொறுமொறுப்பான பகோடா செய்தும் அசத்தலாம்.  உடனடியாகச் செய்யக்கூடிய இந்த பகோடா மாலை நேரத்துக்கேற்ற சுவையான சிற்றுண்டியாக அமையும்.

என்ன தேவை?

கடலை மாவு – முக்கால் கப்
அரிசி மாவு – கால் கப்
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்
வெங்காயம் – 2 கப்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்துவைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share