இன்னைக்கு மதியம் டீக்கடைக்கு போயிருந்தேன். மாஸ்டர் கிட்ட ஒரு டீ போட சொல்லிட்டு, கடை முன்னால நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போம் ரெண்டு பேரு…டீ குடிச்சிக்கிட்டே அரசியல் பேசிக்கிட்டு இருந்தாங்க…
“பிரேமலதா 14 சீட் கேக்குறாங்களாம்….இதெல்லாம் அந்தம்மாவுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல… பார்லிமெண்ட்ல அன்னைக்கு டி.ஆர்.பாலு வெள்ள நிவாரண நிதி கேட்டப்போம்…நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சும்மா புட்டு புட்டு வைச்சிட்டாங்க….டி.ஆர்.பாலுவால பேசவே முடியலைன்னு” அவங்க கான்வர்சேஷன் போய்க்கிட்டு இருந்துச்சு…
அப்போம் திடீர்னு என் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தரு, “மோடி ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மாட்டுக்காரு….குஜராத் சிஎம்-ஆ இருந்தப்போ மட்டும் மாநிலங்களுக்கு நிதி கொடுக்கனும்னு பேசுனாருல்ல…இப்போம் ஏன் பேச மாட்டுக்காருன்னு” சண்டைக்கு போய்ட்டாரு…
இதனால டீக்கடை கொஞ்ச நேரத்துல ரணகளமாயிட்டு…உடனே இந்த சண்டையை ஆஃப் பண்ண டீ மாஸ்டர், “இன்னும் தேர்தலே வரல அதுக்குள்ள இந்த அக்கப்போறான்னு” உச் கொட்டுனாப்புல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கேப்டன் மில்லர் பார்த்து டைம் டிராவல் பண்ண பீலிங் மாமா..
சுதந்திர போராட்ட காலத்துக்கே போயிட்டியா மாப்ள?
அதில்ல மாமா..படம் சனிக்கிழமை தான் பார்த்தேன் ஆனா ஞாயித்துகிழமை மதியம் பிரியாணி தின்னுட்டு சலூன்ல முடி வெட்டிக்கற நேரத்துக்கு டைம் டிராவல் பண்ணி போன மாதிரி அப்படி ஒரு தூக்கம்.
Mannar & company™🕗
நம்பவைத்து கழுத்தறுப்பதில் கசாப்கடைக்கார்கள் முதலிடத்திலும்
கட்சிக்காரர்கள், கடன்காரர்கள், சொந்தக்காரர்கள்
அடுத்தடுத்த இடத்திலும் இருக்கிறார்கள்!
"பிப்ரவரி 14 அட்ராசிட்டி…!!!" 😂😂 pic.twitter.com/0SRUjjntGw
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) February 10, 2024
▶படிக்காதவன்™✍
ஒருவாட்டி யாராவது எனக்கு கடன் கொடுத்து பாக்க சொல்லுங்க மேடம்
பிப்ரவரி 30 தேதி கரைக்டா கொடுக்குறேன்னா இல்லையான்னு…
தர்மஅடி தர்மலிங்கம்
எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவே முடியாது! – பிரதமர் மோடி!
அதான… வெற்றி பெற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை தான் விலைக்கு வாங்கிடுறீங்களே.?!
சரண்யா
நெல்லுக்கு பாயும் நீர் சிறு புல்லுக்கும் பாயும் என்பது,
கூட்டம் அதிகம் உள்ள ஜவுளிக்கடை வாசலில்
சிறிய கடை போட்டு வியாபாரம் பண்ணுவது….
அஞ்சலி👸
6 மணிக்கு எந்திரிக்க ஆரம்பிச்சு, அப்படியே 5.30, 5 ன்னு போயிட்டு இருந்துச்சு
இப்போ என்னடான்னா 4 மணிக்கே முழிப்பு வந்துருது🤧🤧
அடேய் சண்டே உனக்கு என்னதான்டா பிரச்சன
mohanram.ko
உயிர் நண்பன் – வாழ்வோ, சாவோ கடைசி வரை உன் கூடவே இருப்பேன்டா
மீ ~ உருப்புட விடவே மாட்டயாடா
🌴 T.R.🌴
நீங்கள் ஒருவரது வாழ்வை பொய்களை கொண்டு சிதைத்தால்,
அச்செயல் நீங்கள் கொடுத்த கடனாகும்.
ஒருநாள் வட்டியும் முதலுமாக வாழ்க்கை உங்களுக்கு திருப்பிக் கொடுத்து கௌரவிக்கும்….!!
கடைநிலை ஊழியன்
ஞாயிற்றுக்கிழமை வீட்டுல செஞ்சு சாப்பிடுற பிரியாணிக்கு
எக்ஸ்ட்ரா டேஸ்ட் வரதுக்கு காரணமே,
செய்யும்போது வீடு ஃபுல்லா மனக்குற அந்த பிரியாணி வாசனை தான் !!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவின் தடைகளை தாண்டி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை: அண்ணாமலை
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15