சிறுநீரகக் கல் அறிகுறிகள்.. வராமல் தடுக்க செய்ய வேண்டியது என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

kidney stones Symptoms and how to prevent

சிறுநீரகக் கல் (Kidney Stones) ஏற்படுத்தும் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போதைய உணவுப் பழக்கம், நீர்ச்சத்து குறைபாடு, உடற்பயிற்சி இல்லாதது, உடன் பருமன் உள்ளிட்டவை காரணமாக சிறுநீரக கற்களின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சிறுநீரக கல் பாதிப்பு  உள்ளவர்களுக்கு நீண்ட காலத்திற்கு அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். அதுபோலவே ஒருசிலருக்கு திடீரென அடி வயிறு மற்றும் முதுகு பகுதியில் கடும் வலி ஏற்படலாம். சிறுநீரக கல் பிரச்சனைகளுக்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் கடுமையான வலியை ஏற்படுத்தும். அத்துடன், சிறுநீரக பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.

ADVERTISEMENT
சிறுநீரகக் கல் அறிகுறிகள்

சிறுநீரகக் கல் உருவாகும்போது ​​ஒருவருக்கு முதலில் அடிவயிற்றில் வலி உண்டாகிறது. இந்த வலி விலா எலும்புகளுக்குச் சற்று கீழே திடீரென ஏற்படுகிறது. கல் சிறுநீர்ப் பாதை வழியாக நகரும்போது, ​​இந்த வலி அடிவயிறு தொடைகள் அல்லது அந்தரங்கப் பகுதிகளுக்கும் பரவக்கூடும். கல்லைக் கீழ்நோக்கித் தள்ளும் முயற்சியின்போது சிறுநீர்ப் பாதை (Kidney stone symptoms) சுருங்குவதால் இந்த வலி அடிக்கடி ஏற்படுகிறது. இதன் விளைவாக, சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் அசவுகரியமாக உணர்கிறார்கள். சிறுநீரில் ரத்தம் வருவதும் கூட சிறுநீரகக் கல்லின் முக்கிய அறிகுறியாகும். சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு, பழுப்பு அல்லது தேநீர் நிறத்தில் வருவதும் அறிகுறிதான்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

​சிறுநீரகக் கல் ​நோயாளிகளுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் உண்டாகலாம். ஆனால், பெரும்பாலானோர் இந்த வலியைச் சிறுநீர்ப் பாதை தொற்று (Burning sensation in urinating) என்று தவறாகக் கருதிவிடுகிறார்கள். சிறுநீரகக் கல்லால் ஏற்படும் எரிச்சல் சிறுநீர்ப் பாதையில் அழற்சியை உண்டாக்கி , சிறுநீர் கழிக்கும்போது அசவுகரியத்திற்கு வழிவகுக்கும். இந்த வலி, குத்துவது போன்ற ஓர் உணர்வாக இருக்கலாம்.  அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிதான். சிறுநீர் கழிக்கும்போது அழுத்தம், சிரமம் அல்லது பலமுறை முயற்சி செய்தும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவையும் ஏற்படலாம்.

ADVERTISEMENT
அடிக்கடி வாந்தி, காய்ச்சல், குளிர்

சிறுநீரகக் கற்கள் அடிக்கடி வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் சிறுநீரகங்களும் செரிமான அமைப்பும் நெருக்கமாக இணைந்துள்ளன.  ஆகவே, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அழுத்தத்தால் இந்த எதிர்வினை ஏற்படுகிறது. சிறுநீரகக் கற்கள் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்படலாம். சில சமயங்களில், காய்ச்சல் ஒரு தீவிரமான சிறுநீர்ப் பாதை (Urinary tract infection) நோய்த்தொற்றையும் குறிக்கலாம்.

சிறுநீரகக் கற்களைத் தடுப்பது எப்படி?

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் உப்பு பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை  கலந்த கூல்டிரிங்குகளை அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உங்கள் உணவில்  சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிவப்பு இறைச்சி (kidney stone diet) போன்ற புரதங்களைச் சமச்சீரான அளவில் உட்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

உடல் பருமனை மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். கால்சியத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். ஆக்சலேட்டுகள் அடங்கிய உணவுகளை உண்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.

சிறுநீரகக் கற்களின் அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. அவை கடுமையான சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஆகவே சிறுநீரகம் அல்லது சிறுநீர் தொடர்பான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share