கேரளா: இளம் மருத்துவர் வந்தனா கொலை – ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

Published On:

| By Mathi

Kerala Verdict Kollam

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரளா மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கில், கொல்லம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கொடூரமான இக்கொலையைச் செய்த பள்ளி ஆசிரியர் ஜி. சந்தீப்பிற்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 மே மாதம், கேரளாவின் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த இளம் மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பள்ளி ஆசிரியர் ஜி. சந்தீப்பால் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி போராட்டங்கள் வெடித்தன. இன்று வெளியான தீர்ப்பு, மருத்துவ உலகிற்கு ஒருவித ஆறுதலை அளித்திருந்தாலும், மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share