இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ’ஸ்னேக்ஸ் அண்டு லாடர்ஸ்’ வெப் சீரீஸ் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிமிஸ் ஆகியோர் இயக்கத்தில் ’ஸ்னேக்ஸ் அண்டு லாடர்ஸ்’ என்கிற வெப் சீரிஸ் ஒன்று தயாராகியுள்ளது. இந்த வெப் சீரீஸை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
தற்போது அந்த சீரிஸின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2000-ஆம் ஆண்டில் நடக்கும் கதையான இந்த சீரிஸில் 4 பள்ளி மாணவர்களின் சாகச பயணத்தில் நடக்கும் விபரீதம், அதற்கு பின்னால் இருக்கும் விபரீத மனிதர்கள் என விரியும் அடுத்தடுத்த பிரச்சனைகள் தான் இந்த வெப் சீரிஸின் கதை எனத் தெரிகிறது. நிறைய திருப்பங்கள் கொண்ட ஒரு திரில்லர் சீரிஸாக இது இருக்கும் எனவும் டிரைலர் மூலம் தெரிய வருகிறது.
இந்த சீரிஸில் பள்ளி மாணவர்களாக கில்லி, சாண்டி, இராய், பாலா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நந்தா, நவீன் சந்திரா, மனோஜ் ராஜா, சிரிந்தா, ராமச்சந்திரன், ஸ்ரீஜத் ரவி, சம்ரித் சூர்யா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த வெப் சீரீஸை கமலா அல்கிமிஸ், திவாகர் கமல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சீரிஸின் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார். இந்த வெப் சீரிஸ் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!
சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்கத் தயங்கியதா போலீஸ்?
“சாம்சங் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்”… எடப்பாடி வலியுறுத்தல்!
ஒரே நேரத்தில் 50 மருத்துவர்கள் ராஜினாமா: எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: வறண்ட சருமம் உள்ளவர்களே… இதையெல்லாம் செய்யாதீர்கள்!