பஹல்கம் தாக்குதலின் போது தீவிரவாதி ஒருவன், “போய் மோடியிடம் சொல்” என்று கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் பேட்டியளித்துள்ளார். Karnataka woman explain Pahalgam horror
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 25க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் ராவும் பலியானார்.
கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் மற்றும் அவரது மனைவி பல்லவி மகன் அபி ஜெயா ஆகியோர் நான்கு நாள் சுற்றுலாவாக காஷ்மீர் சென்றனர்.
இந்த நிலையில் இவர்கள் பஹல்கம், சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்தபோது, இந்த பயங்கர நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்வு தொடர்பாக கன்னட டிவி சேனலுக்கு பேட்டியளித்துள்ள மஞ்சுநாத் ராவ் மனைவி பல்லவி, “விடுமுறைக்காக நாங்கள் இங்கு வந்தது எங்களுடைய துரதிர்ஷ்டம். இந்த மலைப்பகுதியில் குறைந்தது 500 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். நாங்கள் குதிரையில் இந்த பகுதிக்கு வந்தோம். மலை உச்சியை அடைந்ததும் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஏதோ ராணுவ நடவடிக்கை என்று நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் மகன் பசியுடன் இருந்ததால் சாப்பாடு வாங்குவதற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு எனது கணவர் சென்றார்.
என் கணவர் எந்த கடையில் இருக்கிறார் என்று பார்த்தபோது தான் மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதை கவனித்தேன்.
என் மகனை அழைத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த என் கணவரின் அருகில் சென்றேன்.
என் கணவரின் தலையில் ஒரு குண்டு பாய்ந்து இருந்தது. பயங்கரவாதி என் முன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் என் கணவரை கொன்று விட்டாய் என்னையும் கொன்றுவிடு என்று கத்தினேன். Karnataka woman explain Pahalgam horror
என் மகனும் நாயே… நீ என் தந்தையை கொன்று விட்டாய்.. எங்கள் இருவரையும் கொன்றுவிடு என்று கதறினான்.
அப்போது அந்த பயங்கரவாதி என்னிடம் நான் உன்னை கொல்ல மாட்டேன், போ போய் மோடியிடம் சொல் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.
பின்னர் மூன்று உள்ளூர் வாசிகள் எங்களை பாதுகாப்பாக மலையில் இருந்து கால்நடையாக அழைத்து வந்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும் விமான மூலம் தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளிடம் பல்லவி கோரிக்கை வைத்துள்ளார். Karnataka woman explain Pahalgam horror
