ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்…!

Published On:

| By Kavi

Karhi's Japan Movie first single

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். இந்த படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்காக நடிகர் கார்த்தி தனது உடல் மொழி, குரல் என அனைத்தையும் மாற்றி ஜப்பான் என்ற கதாபாத்திரமாகவே உருமாறி நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எஸ்.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜப்பான் படத்தில் அனு இமானுவேல், சுனில், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் கார்த்தி ஜப்பான் படத்தில் மிகப்பெரிய கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 23ஆம் தேதி ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “Touching Touching” பாடல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

வரும் தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அஜித் வீட்டின் சுவரை இடித்த அரசு: காரணம் என்ன?

சாம்சங் அறிமுகப்படுத்தும் ‘Galaxy tab A9′!

 

Touching Touching - Lyrical Video | Japan (Tamil) | Karthi, Anu Emmanuel | GV Prakash | Raju Murugan

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share