துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜான்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு இடையே இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் படக்குழுவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க, சென்னையில் உள்ள அஜித் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது
சில மாதங்களாகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சாலை விரிவாக்க பணிகள் காரணமாக நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு வாயிலில் உள்ள மதில் சுவர் இடிக்கப்பட்டு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் அஜித் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டது போலவே கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தனியார்களுக்கு சொந்தமான மதில் சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் மதில் சுவர்கள் கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை!
கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை