சாம்சங் நிறுவனத்தின் புதிய டாப்லெட் மாடலான ‘கேலக்சி டேப் A9′(galaxy tab A9) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய டேப்லெட் மாடல், 8.7 அங்குலம் மற்றும் 11 அங்குலம் என இரு வகையான டிஸ்பிளேகளிலும் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய டேப்லெட், ‘டேப் A9( Tab A9)’ மற்றும் ‘டேப் A9+’ என இரண்டு மாடல்களில், சாம்பல், சில்வர் உள்ளிட்ட நிறங்களில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லெட் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும், மக்களுக்கு பணிரீதியாக உதவும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வர்த்தக குழுவின் தலைவர் டி.எம் ராஹ் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வகையான டேப் மாடல்களின் ஸ்டோரேஜ் அமைப்பும் இரு வகையாக உள்ளது. 4GB+64GB என ஒன்றும், 8GB+128GB என ஒன்றுமாகவுள்ளது. இதில். A9 மாடலில் முன் கேமரா 2 மெகா பிக்ஸல், மற்றும் பின் கேமரா 8 மெகா பிக்ஸலாக அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, A9+ மாடல் டேபில் பின் கேமரா 8 மெகா பிக்ஸல் மற்றும் முன் கேமரா 5 மெகா பிக்ஸல் என அமைக்கப்பட்டுள்ளது.
A9 மாடலின் பேட்டரி 5,100mAh.அதுவே A9+ மாடலில் 7,040 mAh ஆகும். இதில் ‘A9+’ மாடல் பயனாளிகளுக்கு சிறந்த சினிமா பார்க்கும் அனுபவம் தரும் எனவும், அதிகமாக கேம் விளையாடும் போதும் சீறாகச் செயல்படும் திறன் கொண்டது எனவும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த டேப் வகையில் டால்பி அட்மாஸ் (Dolby atmos) ஒலி திறன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல வேலைகளில் ஒரே நேரத்தில் செய்யக்கூடிய வகையில் ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதியும் உள்ளது.
– ஷா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கவுதமியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் : அண்ணாமலை
தினமும் ஆவி பிடித்தால் முகம் பளப்பளப்பாகுமா?
PAK vs AFG: சென்னையில் ’1999’ வெற்றியை மீண்டும் எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!
சைலேந்திர பாபு நியமன பரிந்துரை : ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு?