ADVERTISEMENT

நூறு கோடி வசூலை அள்ளிய லோகா… வரலாற்றில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன்!

Published On:

| By christopher

kalyani priyadharshan lokah hit 100cr in worldwild

மலையாள நடிகை கல்யாணி பிரிதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

அருண் டொமினிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேமலு’ புகழ் நஸ்லன், மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா அத்தியாயம் 1: சந்திரா. கேரளாவின் ஓணம் திருநாளையொட்டி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான இப்படம் கடந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் வாட் தி ஃபஸ் தளம் தெரிவித்துள்ளது.

மேலும் மோகன்லாலின் எம்புரான் மற்றும் துடரும் படத்தைத் தொடர்ந்து அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் லோகா பெற்றுள்ளது.

ADVERTISEMENT
https://twitter.com/WhatTheFuss_/status/1963138548636467514

இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 12வது மலையாளப் படம் என்ற பெருமையை லோகா பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர்களே கோலோச்சும் தென்னிந்திய திரையுலகில், ஹீரோயினை மையப்படுத்தி வெளியாகியுள்ள லோகா முதன்முறையாக 100 கோடி வசூலை எட்டியுள்ளது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் தென்னிந்தி சினிமாவில் கதாநாயகியை மையப்படுத்தி அதிக வசூல் செய்த படங்களாக கீர்த்தி சுரேஷின் மகாநதி (ரூ. 84.5 கோடி), அனுஷ்கா ஷெட்டியின் ருத்ரமாதேவி (ரூ. 82 கோடி), அருந்ததி (ரூ. 68.5 கோடி) மற்றும் பாகமதி (ரூ. 64 கோடி) ஆகிய தெலுங்குப் படங்கள் இருந்தன.

ஆனால் அவற்றின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்திற்குள் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.

கடந்த வாரம் மலையாளம், தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான இத்திரைப்படம், நாளை முதல் இந்தியிலும் வெளியாக உள்ளது. இதனால் லோகா படத்தின் வசூல் திரையுலகில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share