சென்னை காமராஜர் அரங்கில் காலையில் இருந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு உட்பட்ட காங்கிரஸ் குழுவினர் தங்களுக்கான தொகுதி லிஸ்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட ஆலோசனைகளை நிகழ்த்தினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களில் காங்கிரஸ் நின்றது. தற்போது அந்த தொகுதிகளில் இருந்தே தற்போதைய 41 தொகுதிகளை பெறலாம் என்று பேசப்பட ‘இந்த முறை கடந்த முறை நிற்காத தொகுதிகளில் இருந்தும் தொகுதிகளை கேட்டு பெறலாம்’ என்ற கருத்தும் பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் , தங்கபாலு உட்பட்ட எட்டு பேர் காங்கிரஸ் குழு, தங்களுக்குத் தேவையான தொகுதி லிஸ்ட்டை ஸ்டாலினிடம் கொடுத்திருகிறார்கள். ‘காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை நாளை வெளியிடுவோம். தொகுதி பட்டியலுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம்’ என்றனர். காங்கிரஸ் கொடுத்துள்ள பட்டியலில் 2011ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒசூர், கிள்ளியூர், குளச்சல், பட்டுக்கோட்டை, விலவங்கோடு ஆகிய தொகுதிகளும் அடக்கம் என காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கேட்ட 41 தொகுதிகள்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
