பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம் மற்றும் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சவுதி சென்றார். ரியாத் நகரில் சவுதி இளவரசரும், அந்நகரின் கவர்னருமான பைசல்பின் பந்தர் பின் அப்துல்லாஜிஸ் மோடியை வரவேற்றார். ரியாத் நகரில் நடைபெற்ற விழாவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, உலக நாடுகளில், இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இளைஞர்களால், இந்தியாவின் வளர்ச்சி மேம்பட தொடங்கியுள்ளது. அவர்களால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை கிடைத்துள்ளது.
உலக நாடுகள் இந்தியாவை அதிகம் கவனிக்கின்றன. மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் உலகிற்கு இந்தியா அதிகமான பங்களிப்பை அளிக்கிறது. இளைஞர்களே இந்தியாவின் பலம். இளைஞர்களால் இந்தியாவுக்கு பெருமை என்றும், நாட்டின் வளர்ச்சி மேம்பட அவர்களே முதன்மைக் காரணம்” எனத் தெரிவித்தார். இதன்பின் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜீசை மோடி சந்திக்க உள்ளார்.,”
