1 பைசாவில் ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை தட்டி தூக்கும் ஜாய் ஆலுக்காஸ்

Published On:

| By Kavi

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தங்கம் கொள்முதல் செய்வதற்கான ரூ.755 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஜாய் ஆலுக்காஸ்  நிறுவனம் பெறவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய், பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராமில் மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். தாய்மாமன்  தங்க மோதிர திட்டம்  என இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து  ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோரப்பட்டது.  அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று  இத்திட்டத்தை  முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். 

இந்தசூழலில் தங்கத்தின் விலையைத் தவிர்த்து,  மோதிரம் செய்வதற்கான கூலி மற்றும் பிற கட்டணங்களுக்கு 1 பைசா மட்டுமே என்று விலைப்புள்ளி அளித்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், ‘L1’ ஏலதாரராகத் (மிகக் குறைந்த விலைப்புள்ளி அளித்தவராக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

இதற்கான அதிகாரப்பூர்வ பணி ஆணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share