தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிரிசெல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
இதில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.5° செல்சியஸ் ஆகவும், சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை அரியலூரில் 24.0° செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. இதில் மலைப்பகுதிகளில் ஒன்றான உதகமண்டலத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை 12.5° செல்சியஸாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை அதிக பட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
