அகவிலைப்படி உயர்வு (DA Hike) குறித்து மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அகவிலைப்படி 2026 ஜனவரி மாதம் அமல்படுத்தப்படவிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களின் பொறுமை குறைந்து வருகிறது. அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நிதியமைச்சரிடம் வேண்டுகோள்:
அகவிலைப்படி உயர்வுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் கவலையில் உள்ளனர். அகவிலைப்படி உயர்வு தொடர்பாக ஊழியர் அமைப்புகள் இப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய என்.பி.எஸ் ஊழியர்கள் அமைப்பு ஆகியவை அகவிலைப்படியை (DA) விரைவில் அறிவிக்குமாறு நிதியமைச்சரை வலியுறுத்தியுள்ளன.
அகவிலைப்படி உயர்வு (DA Hike) எப்போது அறிவிக்கப்படும்?
ஊழியர் அமைப்புகள் ஏப்ரல் 9 அன்று நிதியமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி, தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. அதில், அகவிலைப்படி அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ஊழியர்களிடையே ஏமாற்றம் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகில இந்திய என்.பி.எஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் மன்ஜீத் சிங் நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், கோவிட் காலத்தில் செய்தது போலவே இந்த ஆண்டும் அரசு அகவிலைப்படியை நிறுத்திவிடுமோ என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், ஈரான் போரினால் அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடியின் காரணமாக, கொரோனா காலத்தில் அரசு அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது போலவே, இப்பொழுதும் போரின் காரணமாக அகவிலைப்படி உயர்வை நிறுத்திவிடுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
