ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்-ஐ இணைய வழியாக ஆர்டர் செய்பவர்களுக்கு சில நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று பிளிங்கிட் செயலி நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா தெரிவித்துள்ளார்.
சொமேட்டோ டெலிவரி நிறுவனத்துக்குச் சொந்தமான பிளிங்கிட் செயலி உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.
பிளிங்கிட் செயலி வாயிலாக காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வீட்டிலிருந்த படியே ஆர்டர் செய்து கொள்ளலாம்.
அப்படி ஆர்டர் செய்பவர்களுக்கு சில நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றனர். இவ்வாறு செயலாற்றி வரும் பிளிங்கிட் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை பல்வேறு பொருட்களை சில நொடிகளில் டெலிவரி செய்த பிளிங்கிட் தற்போது ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஐபோன் 14 சீரிஸ் போன்களை (ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 புரோ, ஐபோன் 14 புரோ மேக்ஸ்) டெலிவரி செய்யவுள்ளது. ஆர்டர் செய்த சில நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மறுவிற்பனையாளரான யூனிகார்ன் உடன் இணைந்து பிளிங்கிட் அதன் செயலி வாயிலாக ஐபோன்களை விற்பனை செய்யவுள்ளது.
மேலும் மற்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களை விட வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக சில நொடிகளில் டெலிவரி செய்யப்படும் என்று பிளிங்கிட் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா அறிவித்துள்ளார் .
ஆப்பிள் ஐபோன் சீரிஸ் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஐபோன் விரும்பிகள் இதனை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளிங்கிட் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆர்டர் செய்துவிட்டு சில நாட்கள் காத்திருக்கும் ஐபோன் விரும்பிகளுக்கு ஒரு ஸ்பெஷல் நியூஸாக உள்ளது.
ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் வசிப்பவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக ஐபோன்கள் பிளிங்கிட் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும் பிளிங்கிட் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
மோனிஷா