15 நிமிடத்தில் ஆலூ ஊத்தப்பம்… மாவு அரைக்கவே வேண்டாம்!

Published On:

| By Kavi

காலை நேரத்தில் தினமும் இட்லி, தோசை என ஒரே மாதிரியான உணவுகளைச் செய்து சலித்துவிட்டதா?

வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான, சுவையான காலை உணவை வெறும் 15 நிமிடங்களில் தயாரிக்கலாம். ரவை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்யப்படும் இந்த ஆலூ ஊத்தப்பம், வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும்.

ADVERTISEMENT

தேவையான பொருட்கள் என்னென்ன?

ஒரு கப் துருவிய உருளைக்கிழங்கு, ஒரு கப் ரவை, அரை கப் கெட்டித் தயிர், ஒரு பெரிய வெங்காயம் ஆகியவை தேவை. இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய கேரட், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் எண்ணெய் அல்லது நெய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மாவு தயாரிப்பது எப்படி?

உருளைக்கிழங்கை நன்றாகத் துருவி, தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ரவை, தயிர், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

ADVERTISEMENT

கால் கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து, சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். ரவை அதிக தண்ணீரை உறிஞ்சினால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தோசைக்கல்லில் ஊத்தப்பம் சுடுவது எப்படி?

தோசைக்கல்லை சூடாக்கி, மிதமான தீயில் மாவை சற்று தடிமனாக ஊற்ற வேண்டும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு மூடி போட்டு சுமார் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

ஒருபுறம் பொன்னிறமாக வெந்ததும் மெதுவாகத் திருப்பி மறுபுறமும் வேகவிடுங்கள். இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக வந்ததும் சுடச்சுட பரிமாறலாம். தக்காளி, புதினா அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் கூடும்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share