ICC WorldCup: டிரெண்டிங்கில் விராட்கோலி – நவீன் உல் ஹக்… மீண்டும் மோதல்?

Published On:

| By christopher

INDIAvsAFGHANISTAN :  டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பையின் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஜசாய் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்யவே தான் நினைத்ததாக  கூறினார் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா

ADVERTISEMENT

சுப்மன் கில் இன்னும் குணமாகாத நிலையில், தொடக்க வீரராக இஷான் கிஷன் இன்றைய போட்டியிலும் ஆடும் லெவனில் தொடர்கிறார். அதேநேரத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் சர்தானை 22 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா. எனினும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர் குர்பாஸ் மற்றும் ரஹ்மத் ஷா.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 48 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் எதிரும்புதிருமாக வார்த்தைப்போரில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் இந்த உலகக்கோப்பையில் ஒரே மைதானத்தில் முதன்முறையாக சந்திக்கின்றனர்.

ADVERTISEMENT

https://twitter.com/Siddharath900/status/1712032841025143293

இதனையடுத்து இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி என்பதை விட, விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் இடையே நடக்க இருக்கும் மோதலை பார்க்கவே ஆர்வமாக உள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் நடவடிக்கை இல்லை: எடப்பாடி

13 மாவட்டங்களில் கனமழை!

 

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share