ADVERTISEMENT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை நெருங்கியது- உயிரிழப்பு 32 ஆக அதிகரிப்பு!

Published On:

| By Minnambalam Desk

India: Covid19 tally Crosses 3,900; deaths Climb to 32

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. India’s Covid19 tally Crosses 3,900

தெற்காசிய நாடுகளில் உருமாறிய கொரொனா வைரஸ்களின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இப்புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தரவுகளின் படி, தற்போது இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3961- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரஇ உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே கேரளாவில்தான் மிக அதிகமாக, கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,400 ஆக உள்ளது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 485 ஆக பதிவாகி இருக்கிறது.

ADVERTISEMENT

தலைநகர் டெல்லியில் உருமாறிய கொரோனா வைரஸ் NB.1.8.1, LF.7 பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 436.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 199; உத்தரப்பிரதேசத்தில் 149 ஆக பதிவாகி இருக்கிறது. சிக்கிமில் மிக குறைவாக 3 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் மட்டும் பதிவாகி உள்ளன.

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக கவசம் உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநில அரசுகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share