கோவையில் பயிற்சிக்கு வந்த 31 வயதான கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி என்பவரை ஆந்திர மாநில சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்து அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ரெட் ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐ.என்.எஸ் அக்ரானி செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தை பிரதீப் முகர்ஜி என்பவர் இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார்.
இவர் கோவை INS அக்ரனியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக கோவையில் தங்கி இருந்தார். இந்நிலையில் ஆந்திரப் பிரதேச காவல்துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் counter intelligence சிறப்பு உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படை ரகசிய பாதுகாப்புத் தகவல்களைக் பிரதீப் முகர்ஜி கசிய விட்டு இருப்பது CI சிறப்பு உளவு பிரிவினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து நடந்த தீவிர விசாரணையில் இந்நிலையில் சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பகிரந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆந்திரமாநில CI சிறப்பு பிரிவு போலீசார் இது குறித்த தகவல்களை தெரிவித்து , அவரை கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.
ஆந்திராவில் இருந்து நேற்று காலை கோவை வந்த சிறப்பு குழு கோவை INS அக்ரானியில் வைத்து இந்திய கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
