சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் சோகம்.. 4-வது மாடியில் இருந்து விழுந்து ஐடி தலைமை மேலாளர் உயிரிழப்பு!

Published On:

| By Mathi

Indian Bank

சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தின் 4-வது மாடியில் இருந்து விழுந்து, அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை மேலாளர் கனிஷ்க் பாஜ்பாய் (57) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த கனிஷ்க் பாஜ்பாய், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தலைமை மேலாளராக பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார்.

ADVERTISEMENT

நேற்று சனிக்கிழமை மாலை அலுவலகத்தின் 4-வது மாடியில் உள்ள கழிவறைக்கு கனிஷ்க் பாஜ்பாய் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் 4-வது மாடி மொட்டை மாடி பகுதியில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார்.

இதனை பார்த்த வங்கியின் பாதுகாவலர் முரளி, உடனடியாக கனிஷ்க் பாஜ்பாயை ஆட்டோவில் ஏற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு கனிஷ்க் பாஜ்பாய் தனது மனைவி மதுவுடன் செல்போனில் சுமார் 15 நிமிடங்கள் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவி மது மற்றும் மகன் கவுரஜ் ஆகியோரிடம் வங்கி வளாகத்திலேயே மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கனிஷ்க் பாஜ்பாய் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share