கமல் இல்லாமல் பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு!

Published On:

| By Minnambalam

நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) முதல் சென்னையில் தொடங்கியது.

indian 2 movie shooting

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சனை காரணமாகவும், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.

ADVERTISEMENT
indian 2 movie shooting

இந்தநிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியது.

ADVERTISEMENT

விக்ரம் திரைப்படம் அதிக வசூலைக் குவித்தது. இதனிடையே, லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தியன் திரைப்படத்தை தயாரிக்கும் என்ற அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை வெளியானது.

இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்

indian 2 movie shooting

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதால் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்தியன் 2 படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

செல்வம்

‘அவர் மீண்டும் வந்துவிட்டார்’: இந்தியன் 2 அப்டேட் கொடுத்த கமல்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share