யாரையும் வொர்த்லெஸ்னு வீசாதீங்க…. குப்பையில் வீசப்பட்ட லாட்டரி செய்த மந்திரம்!

Published On:

| By Kumaresan M

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ரகுராமன். இவர், மெடிக்கல் கடை வைத்துள்ளார் . ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் லாட்டரி டிக்கெட் வாங்குவதை இவர் வழக்கமாக வைத்திருந்துள்ளார். 45 மற்றும் 12 என்று முடிவைடையும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவது மட்டுமே இவரது வாடிக்கையாக இருந்துள்ளது. அதாவது, இந்த இரு எண்களும் ரகுராமின் லக்கி நம்பர்களாம். discards winning lottery in dustbin

அந்த வகையில், கண்ணூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடத்தில் இரு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். தொடர்ந்து, கடந்த வாரத்தில் லாட்டரி குலுக்கல் முடிவுகளை காசர்கோட்டிலுள்ள சாம் சாம் லாட்டரி கடைக்கு சென்று பார்த்துள்ளார். 5 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான பரிசு தொகைக்கான குலுக்கல் முடிவுகளை மட்டுமே ரகுராமன் பார்த்துள்ளார். அதில், பரிசு விழவில்லை என்றதும் சாம் சாம் லாட்டரி கடையிலுள்ள குப்பை தொட்டியில், இரு லாட்டரி டிக்கெட்டுகளை வீசி விட்டு சென்று விட்டார் ரகுராமன். discards winning lottery in dustbin

இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி மகாசிவராத்திரி தினத்தில் கண்ணூரில் இருந்து லாட்டரி சப் ஏஜண்ட் கிருஷ்ணன் ரகுராமின் மெடிக்கலுக்கு வந்துள்ளார். பின்னர், ரகுராமிடத்தில் வாங்கிய லாட்டரி டிக்கெட்டை எங்கே? என்று கேட்டுள்ளார். ரகுராமும் விஷயத்தை கூறி குப்பையில் வீசி விட்டதாக அசால்ட்டாக கூறியுள்ளார். அடப்பாவி… 45 என்று முடிவடைந்த டிக்கெட்டுக்குதான் ஒரு லட்சம் பரிசு விழுந்துருக்குப்பா… என்று கிருஷ்ணன் தலையில் அடித்தபடி கூறியுள்ளார். discards winning lottery in dustbin

இதனால், அதிர்ச்சியடைந்த ரகுராமன் உடனடியாக கிருஷ்ணனை அழைத்து கொண்டு காசர்கோட்டிலுக்க சாம் சாம் லாட்டரி டிக்கெட் கடைக்கு ஓடியுள்ளார். அங்கு, உரிமையாளர் வினோத்திடம் உண்மையை கூறி லாட்டரி டிக்கெட்டை தேடியுள்ளனர். வினோத் குப்பையில் வீசப்படும் லாட்டரிகளை சேகரித்து மூட்டையாக கட்டி வைத்திருப்பது வாடிக்கை. discards winning lottery in dustbin

தொடர்ந்து, அந்த மூட்டைகளை பிரிந்து ஒரு மணி நேரம் தேடி WF-438045 என்ற பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை கண்டுபிடித்து ரகுராமனிடம் வினோத் ஒப்படைத்தார். முன்னதாக, ரகுராமன் லாட்டரி டிக்கெட்டை வீசியதை சிசிடிவி காட்சிகள் வழியாக உறுதிபடுத்தி கொண்டார். பரிசுத் தொகை விழுந்த டிக்கெட் மீண்டும் கிடைத்ததால், ரகுராமன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். discards winning lottery in dustbin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share