அடுத்த 4 நாட்களுக்கு வெயில்… வானிலை எச்சரிக்கை!

Published On:

| By Kavi

Increasing heat for the next 4 days

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Increasing heat for the next 4 days

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58 டிகிரி, கரூரில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட்  வெயில் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 5) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 35° செல்சியஸ் பதிவாகியுள்ளது” என்று  தெரிவித்துள்ளது.

மேலும்,  “05-03-2025 முதல் 09-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்” என்றும் கூறியுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வரும் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. Increasing heat for the next 4 days

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share