நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள முக்கிய மசோதாக்கள் மீதான திமுகவின் (DMK) நிலை என்ன என்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பதுதான் திமுகவின் முடிவு. ஆகையால் மத்திய அரசின் மசோதாக்கள் விவகாரத்தில் பாஜகவை திமுக வெளிப்படையாக ஆதரிக்குமா? மறைமுகமாக ஆதரவு தருமா? என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
திமுகவுக்கு மக்களவையில் 22; மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் உள்ளனர்.
மக்களவையின் தற்போதைய நிலவரம்:
- மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை: 543.
- மக்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் 540
- அரசியல் சாசன திருத்த மசோதா, நிறைவேற சபையில் 3-ல் 2 பங்கு எம்.பிக்கள் ஆதரவு தேவை. அப்படி எனில் 540 உறுப்பினர்கள் அவையில் இருக்கும்போது, 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
- தற்போதைய நிலைமையில் பாஜக கூட்டணிக்கு 319 எம்.பிக்கள் உள்ளனர்.
- ஆகையால் 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு (360) தேவையான 41 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
யூகம்-1 : திமுக ஆதரித்தால்?
மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுகவின் 22 எம்.பிக்கள் ஆதரிப்பது என முடிவெடுத்தால்..
- பாஜக கூட்டணி எம்.பி.க்கள் எண்ணிக்கை 341 ஆக உயரும்
- அதே நேரத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு 19 எம்.பிக்கள் ஆதரவு தேவைப்படும்.
யூகம் 2 : திமுக வெளிநடப்பு செய்தால்?
- திமுகவின் 22 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தால், சபையின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 518 ஆக குறையும்
- 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு 345 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்பதாக இருக்கும்.
- திமுக மட்டும் வெளிநடப்பு செய்தாலும் கூட மக்களவையில் பாஜகவால் மசோதாவை நிறைவேற்ற முடியாது.
யூகம் 3: திமுகவும் சமாஜ்வாதி கட்சியும் வெளிநடப்பு செய்தால்..
- 37 எம்.பி.க்களைக் கொண்ட சமாஜ்வாதி கட்சியும் 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவும் வெளிநடப்பு செய்தால் சபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 481 ஆகக் குறையும்
- அப்போது 3-ல் 2 பங்கு ஆதரவு என்பதற்கு 321 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
- பாஜக கூட்டணிக்கு இருப்பதோ 319 எம்.பி.க்கள்தான். அப்போதும் மசோதாவை நிறைவேற்ற முடியாது.
யூகம் 4: சமாஜ்வாதி கட்சி மட்டும் ஆதரவு அளித்தால்..
- பாஜக கூட்டணியின் பலம் 319
- சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் 37
- மசோதாவுக்கு ஆதரவு 356 எம்.பி.க்கள்
- மசோதா நிறைவேற மேலும் 4 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
யூகம் 5: திமுக மட்டும் ஆதரவு அளித்தால்
- பாஜக கூட்டணியின் பலம் 319
- திமுக எம்.பி.க்கள் 22
- மசோதாவுக்கு ஆதரவு 341 எம்.பி.க்கள்
- மசோதா நிறைவேற மேலும் 19 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
யூகம் 6: திமுக, சமாஜ்வாதி கட்சி இணைந்து ஆதரித்தால்?
- பாஜக கூட்டணியின் பலம்: 319 எம்.பி.க்கள்.
- திமுக ஆதரவு: 22 எம்.பி.க்கள்.
- சமாஜ்வாதி கட்சி ஆதரவு: 37 எம்.பி.க்கள்.
- மொத்த ஆதரவு: 319 + 22 + 37 = 378 எம்.பி.க்கள்.
- 3-ல்2 பங்கு பெரும்பான்மைக்கு தேவை: 360 என்பதால் மசோதா எளிதாக நிறைவேறும்.
மாநிலங்களவையில்..
- மாநிலங்களவையில் மொத்த எம்.பி.க்கள் 250
- தற்போது எம்.பி.க்கள் எண்ணிக்கை 242
-3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு தேவை 163 எம்.பி.க்கள் - தற்போதைய நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு 141 எம்.பி.க்கள்
- சுயேட்சைகள், நியமன எம்.பிக்கள் ஆதரவுடன் 151
- மசோதாவை நிறைவேற்ற 12 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
- திமுகவின் எம்.பி.க்கள் 8
- சமாஜ்வாதி எம்.பி.க்கள் 4
யூகம் 1 : திமுக வெளிநடப்பு செய்தால்..
- சபையின் மொத்த எண்ணிக்கை 234 ஆக குறையும்
- 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்பிக்கள் 156
- பாஜக கூட்டணிக்கு ஆதரவு 151
- மசோதாவை நிறைவேற்ற 5 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
யூகம் 2: திமுக, சமாஜ்வாதி இரண்டும் இணைந்து வெளிநடப்பு செய்தால்
- சபையின் மொத்த எண்ணிக்கை 230 ஆக குறையும்
- 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு தேவை 154
- பாஜக கூட்டணிக்கு ஆதரவு 151
- மசோதாவை நிறைவேற்ற 3 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
யூகம் 3: திமுக மட்டும் ஆதரித்தால்
- பாஜக கூட்டணியின் பலம்: 151
- திமுக எம்.பி.க்கள்: 8
- மசோதாவுக்கு ஆதரவு 159
- தேவையான ஆதரவு எம்.பிக்கள் 162
- மசோதா நிறைவேற 3 எம்.பிக்கள் ஆதரவு தேவை
யூகம் 4: சமாஜ்வாதி கட்சி மட்டும் ஆதரித்தால்
- பாஜக கூட்டணியின் பலம்: 151
- சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள்: 4
- மசோதாவுக்கு ஆதரவு: 155
- தேவையான ஆதரவு எம்.பிக்கள் 162
- மசோதா நிறைவேற 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
யூகம் 5: திமுக, சமாஜ்வாதி இரண்டும் ஆதரவு தந்தால்
- பாஜக கூட்டணியின் பலம் 151.
- திமுக எம்.பி.க்கள்: 8.
- சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள்: 4.
- மொத்த ஆதரவு: 151 + 8 + 4 = 163
- மசோதா நிறைவேறும்
முடிவு என்ன?
- மக்களவையில் திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தனித்தனியாக ஆதரித்தாலும் அல்லது திமுக மட்டும் வெளிநடப்பு செய்தாலும், பாஜக கூட்டணியால் 360 என்ற இலக்கை எட்ட முடியாது. திமுக மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜக கூட்டணியின் பலம் 378 ஆக உயர்ந்து, மசோதா மக்களவையில் எளிதாக நிறைவேறும்
- மாநிலங்களவையில் திமுக மட்டும் ஆதரித்தால் 3 வாக்குகள் தேவைப்படும்; சமாஜ்வாதி மட்டும் ஆதரித்தால் 7 வாக்குகள் தேவை; திமுக வெளிநடப்பு செய்தால் 5 வாக்குகள் தேவைப்படும்; திமுக, சமாஜ்வாதி இரண்டும் வெளிநடப்பு செய்தால் 3 வாக்குகள் தேவைப்படும். இங்கும் திமுகவும் சமாஜ்வாதியும் ஆதரவு தந்தால் பெரும்பான்மை கிடைத்து மசோதா நிறைவேறும்
