தவெக தலைவர் விஜய்யை கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அழைத்தால் என்ன செய்வது என்பது குறித்து டெல்லியில் பாஜக மூத்த வழக்கறிஞர்களுடன் தவெக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 2-வது கட்டமாக டெல்லியில் விசாரித்து வருகின்றனர்.
தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கரூர் மா.செ. மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு 3 நாட்கள் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விஜய்யை டெல்லிக்கு சிபிஐ அழைத்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களுடன் டெல்லியில் தவெக நிர்வாகிகள் மும்முரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனையில்
- சிபிஐ அழைக்கும் தேதியை மாற்ற சொல்லி கேட்க முடியுமா?
- சிபிஐ விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆஜராக விலக்கு கேட்க முடியுமா?
- சிபிஐ அழைத்தால் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் ஹோட்டலில் தங்கித்தான் ஆக வேண்டுமா?
- சிபிஐ விசாரணைக்கு விஜய்க்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராக முடியுமா?
- தவெக நிர்வாகிகளிடம் நிறைய கேள்விகளை கொடுத்து எழுத்துப்பூர்வமாக எழுதித் தர சிபிஐ சொன்து போல விஜய்யிடம் கேட்டால், அப்படியே செய்து தர வேண்டுமா? அல்லது அதைத் தவிர்க்க வாய்ப்பு இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
