வைகோ – விஜயகாந்த் சந்திப்பு

Published On:

| By Balaji

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிக கட்சியும் சேர்ந்து போட்டியிடுகிறது. இரண்டு கட்சிக்கான தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது, தேர்தல் பிரச்சார உத்தி மற்றும் கூட்டணிக்குள் புதிதாகச் சேரும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share