கண் கருவளையங்களை அகற்ற சூப்பர் வீட்டு வைத்தியம்.. உருளைக்கிழங்கு போதும்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

How To Remove dark circles under eyes using potato home remedy

உருளைக் கிழங்கு வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி கண்ணின் கீழ் உள்ள கரு வளையங்களை அகற்றுவது (Remove dark circles) எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, தூக்கமின்மை, அதிக நேரம் செல்போன் பார்ப்பது போன்றவற்றால் கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதனை சரிசெய்ய மக்கள் விலை உயர்ந்த க்ரீம்கள், சிகிச்சைகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அவை எப்போதும் சரியான பலன்களைத் தருவதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். இயற்கையான வீட்டு வைத்தியங்கள் பாதுகாப்பானவை. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைக் குறைக்கவும் உதவும்.

ADVERTISEMENT

கருவளையங்களை நீக்கும் (Remove dark circles) உருளைக்கிழங்கு:

இப்போது நாம் உருளைக் கிழங்கை பயன்படுத்தி எப்படி கண்ணில் கரு வளையங்களை அகற்றுவது என்பது குறித்துப் பார்ப்போம். உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான பண்புகள் சருமத்தை பொலிவாக்கவும், கருவளையங்களைக் (Potatoes to remove dark circles) குறைக்கவும் உதவுகின்றன. உருளைக்கிழங்கில் உள்ள கேட்டசின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) மற்றும் வைட்டமின் சி போன்ற கூறுகள் சருமத்திற்கு ஊட்டமளித்து, நிறமாற்றத்தைக் குறைக்கின்றன. உருளைக்கிழங்கு சாறு குளிர்ச்சியையும் அளித்து, கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் சோர்வைக் குறைக்கிறது.

எப்படி அப்ளை செய்வது?:

முதலில் ஒரு பச்சை உருளைக்கிழங்கை (How To apply home remedy) எடுத்து அதை நன்கு கழுவி தோலை உரித்துக்கொள்ள் வேண்டும். பிறகு உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றை எடுக்க வேண்டும். இந்தச் சாறை ஒரு பஞ்ச்சில் தொட்டு நனைத்து கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவவும். இதனை சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். நேரம் முடிந்ததும், உங்கள் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு குறைந்தது 3-4 முறை செய்வதன் மூலம், சில நாட்களிலேயே கண்கூடான பலன்களைக் காணலாம்.

ADVERTISEMENT

தூக்கம் மிகவும் முக்கியம்:

உருளைக் கிழங்கைப் பயன்படுத்தும் போதெல்லாம், எப்போதும் புதியதையே பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவ் ஆக இருந்தால், முதலில் ஒரு தோலில் சிறிய பகுதியில் சோதனை செய்து பாருங்கள். கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தூக்கமின்மையே (Sleep is important). எனவே, அவற்றை நீக்க விரும்பினால், போதுமான அளவு தூங்குவது அவசியம். வெயிலில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் அல்லது சன்கிளாஸ் அணிந்து செல்லுங்கள்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share