ஐந்து நிமிடத்தில் அசத்தல் டிஃபன்! மொறுமொறுவென்று நச்சுனு ஒரு சீஸி பன்னீர் டோஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

how to make crispy paneer toast recipe easy snacks

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து தருவது என்று யோசித்து அலுத்துப் போய்விட்டதா? அல்லது பேச்சுலர்கள் காலை அவசரத்தில் சமைக்க ஈஸியான, அதே சமயம் புரோட்டீன் நிறைந்த ஒரு ஹெல்தியான பிரேக்பாஸ்ட் தேடுகிறீர்களா? உங்களுக்குத் தாராளமாகக் கைகொடுக்கும் ஒரு சூப்பர் ரெசிபிதான் இந்த பன்னீர் டோஸ்ட் (Paneer Toast).

ஹோட்டல்களில் விற்கப்படும் சாண்ட்விச்சை விட வீட்டில் நம் கைகளால் மிகக் குறைந்த செலவில், சமைக்கத் தெரியாதவர்கள் கூட நட்சுனு செய்யக்கூடிய எளிய பன்னீர் டோஸ்ட் செய்முறை இதோ!

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

  • பிரெட் ஸ்லைஸ்கள் (Bread Slices): 4 அல்லது 6
  • பன்னீர் (Paneer): 100 கிராம் (நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்)
  • பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் (Capsicum): பாதியளவு (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்: 1/2 டீஸ்பூன்
  • மசாலாக்கள்: தனி மிளகாய்த்தூள் (1/2 டீஸ்பூன்), கரம் மசாலா (1/4 டீஸ்பூன்), சாட் மசாலா (1/4 டீஸ்பூன்), மஞ்சள் தூள் (ஒரு சிட்டிகை)
  • கொத்தமல்லித்தழை: சிறிதளவு
  • வெண்ணெய் அல்லது நெய்: டோஸ்ட் செய்யத் தேவையான அளவு
  • சீஸ் துருவல் (Cheese): விருப்பப்பட்டால்
  • உப்பு: தேவையான அளவு

சுவையான பன்னீர் மசாலா தயாரிப்பு

  • முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றிச் சூடாக்குங்கள்.
  • அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • தொடர்ந்து நறுக்கிய தக்காளி மற்றும் குடைமிளகாயைச் சேர்த்து, அவை சற்றே சுருங்கும் வரை வதக்க வேண்டும் (குடைமிளகாய் லேசான மொறுமொறுப்புடன் இருப்பதுதான் டோஸ்ட்டிற்கு நல்ல சுவை தரும்).
  • இப்போது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து மசாலாவை மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்குங்கள்.
  • வதக்கிய மசாலாவுடன் உதிர்த்து வைத்துள்ள பன்னீரைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பன்னீர் மசாலாவுடன் சேர்ந்து வெந்து வர 2 நிமிடங்கள் போதுமானது.
  • இறுதியாக சாட் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், கமகமக்கும் பன்னீர் ஸ்டஃப்பிங் (Paneer Stuffing) தயார்.

பிரெட்டை மொறுமொறுப்பாக டோஸ்ட் செய்யும் வித்தை

  • இப்போது ஒரு பிரெட் ஸ்லைஸை எடுத்து, அதன் மேல் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை தாராளமாகப் பரப்பி வையுங்கள்.
  • உங்களுக்கு சீஸ் பிடிக்கும் என்றால், மசாலாவின் மேல் சிறிதளவு சீஸ் துருவலைத் தூவிக் கொள்ளலாம். அதன் மேல் மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து லேசாக அழுத்தவும்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி, தாராளமாக வெண்ணெய் அல்லது நெய் தடவுங்கள்.
  • நாம் தயார் செய்து வைத்துள்ள பிரெட் சாண்ட்விச்சை கல்லில் வைத்து, இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் (Crispy) வரும் வரை திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து எடுங்கள்.
  • சூடான, சுவையான சீஸி பன்னீர் டோஸ்ட் சாப்பிடுவதற்குத் தயார்!

அம்மாவின் சமையல் ரகசியம்:

  • உங்களது வீட்டில் இருக்கும் குழந்தைகள் பன்னீரை உதிர்த்துச் சாப்பிடுவதை விட துண்டுகளாகச் சாப்பிட ஆசைப்பட்டால், பன்னீரை மிகச் சிறிய கியூப்களாக (Tiny cubes) நறுக்கியும் மசாலாவில் சேர்க்கலாம்.
  • பிரெட்டின் உட்புறத்தில் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் (Tomato Ketchup) தடவி, அதன் மேல் பன்னீர் மசாலாவை வைத்தால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.

இதனை நடுவில் முக்கோண வடிவில் வெட்டி, தக்காளி சாஸுடன் தொட்டுச் சாப்பிட்டால் தட்டே காலியாவது தெரியாது. உடனே இன்று மாலையே உங்களது வீட்டில் இந்த எளிய மொறுமொறுப்பான பன்னீர் டோஸ்ட்டைச் செய்து அசத்துங்கள்!

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share