’இதற்கு முன்பு 19 முறை விண்வெளிக்கு போயிருக்கேன்… யாரும் கண்டுக்கல’ – டிராகன் மைண்ட்வாய்ஸ்!

Published On:

| By Kumaresan M

அமெரிக்காவை பொறுத்த வரை போயிங் ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் தான் விண்வெளி ஆக்கிரமிப்பில் கடுமையாக போட்டி போட்டு வந்தன. விண்வெளிக்கு 3வது முறையாக போயிங் ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலில்தான் சுனிதா சென்றடைந்தார். பின்னர், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீரர்கள் இல்லாமல் அது தனியே பூமியை வந்தடைந்தது. how many time dragon went space?

பின்னர், டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் சுனிதாவை தரைக்கு அழைத்து வரும் பொறுப்பை கொடுத்தார். இப்போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூலில் சுனிதா வெற்றிக்கரமாக பூமியை வந்தடைந்துள்ளார். தற்போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு விண்வெளித்துறையில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, 19 முறை டிராகன் விண்வெளிக்கு சென்று வந்துள்ளது. அப்போதெல்லாம் டிராகனை யாரும் கண்டுக்கல. இப்போது, சுனிதாவை அழைத்து வந்ததால் டிராகன் உலகம் முழுவதும் பாப்புலராக்கியுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் மற்றும் விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகிறது. கார்கோ டிராகன் சரக்குகளை மட்டும் கொண்டு செல்லும். க்ரூ டிராகன் விண்வெளி வீரர்களை ஏற்றி செல்லும். 8.1 மீட்டர் உயரமும் 4 மீட்டர் அகலமும் இது கொண்டிருக்கும். 6 ஆயிரம் கிலோ எடை சரக்குகளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது.

டிராகன் கேப்ஸ்யூல் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதோடு, தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் விண்வெளி வாகனம் என்ற பெருமையைப் பெற்றது. இதில், ஒரே சமயத்தில் 7 பேர் வரை பயணிக்க முடியும். 2020 ஆம் ஆண்டில், க்ரூ டிராகன் முதல் முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. இந்த கேப்ஸ்யூல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், செலவும் வெகுவாக குறைகிறது. இதன் , மேம்பட்ட தொழில்நுட்பம் பாதுகாப்பு காரணமாக நாசாவின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. how many time dragon went space?

ரஷ்யாவின் சூயஸ் விண்கலம் விண்வெளியில் 420 கி.மீ உயரத்தில் இருந்து 3.5 மணி நேரத்தில் பூமிக்கு வந்தடையும். ஆனால், அதே வேளையில் 28 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் டிராகன் பூமியை வந்தடைய 17 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. எனினும், டிராகன் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பதால் நாசாவின் அதீத நம்பிக்கையை பெற்றுள்ளது.

டிராகனின் வெற்றியால் இத்தனை ஆண்டுகாலம் வான்வெளி, விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தி வந்த போயிங் நிறுவனத்தின் மதிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 100 ஆண்டு கால பழமையான போயிங் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் போல விரைவாக முடிவெடுத்து புதிய சவால்களை சந்திக்க தயாராக இல்லாததே தோல்விகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் பல வெற்றிகளை பெற தொடங்கியுள்ளது. எலான் மஸ்க் ஒருவர்தான் முடிவெடுக்கிறார். புதிய முயற்சிகளை செய்து பார்க்கிறார். பல தோல்விகளுக்கு பிறகு, வெற்றி பெறும் வழியை கண்டுபிடிக்கிறார். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள போயிங் நிறுவனம் தயங்குவதால், அது பின்னடைவை சந்திப்பதாக கூறப்படுகிறது. how many time dragon went space?

ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை கொண்டு செல்லும் முடிவை துணிச்சலாக எடுத்துள்ளது. துணிச்சலான அத்தகைய இலக்குகளில் பெரிதும் முதலீடு செய்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வை ஊழியர்களையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால், அவர்கள் வெற்றிக்காக போராடுகிறார்கள். அதே நேரத்தில் போயிங் பழமைவாத அணுகுமுறையுடன் இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களை பெறுவதிலும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறது.ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ சுறுசுறுப்பு, துணிவு, புதுமை , ஆபத்துகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று விடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share