சாப்பிட்ட பிறகு அசிடிட்டி (acidity) பிரச்சனையால் அவதியா? இதே சூப்பர் வீட்டு வைத்தியம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Home remedies to relief acidity problem after eating

சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசிடிட்டி (Acidity) எனப்படும் அமிலப் பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம்.

உணவு சாப்பிட்ட பிறகு பலரும் தங்களுக்கு அமிலப் பிரச்சனை (அசிடிட்டி) இருப்பதாக சொல்வதைக் காண முடியும். குறிப்பாக சாப்பிட்ட பிறகு அமிலத் தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் பலருக்கும் ஏற்படலாம். அசிடிட்டி பிரச்சனை நமது வாழ்க்கை முறையையே கஷ்டப்படுத்துகிறது. அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட பலரும் தற்காலிக நிவாரணமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவை நீண்ட கால நிவாரணத்தைத் தருவது இல்லை.

ADVERTISEMENT

அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணம் (Reason for acidity) :  அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனை என்பது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அசிடிட்டி பிரச்சனையை சரியான நேரத்தில் சரிசெய்யவில்லை என்றால் இரைப்பை புண்கள், உணவுக் குழாய் அழற்சி உள்பட செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதே சமயம் அசிடிட்டி பிரச்சனையை சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்தே அதனை சரிசெய்யலாம். இந்த வீட்டு வைத்தியங்கள் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அசிடிட்டியை சரிசெய்ய வீட்டு வைத்தியங்கள் (home remedies to relief from acidity) : இஞ்சி அல்லது சுக்குவை (Ginger or sukku) சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை நெஞ்செரிச்சல், அமிலத் தன்மை பிரச்சனையை குறைக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு அரை  தேக்கரண்டி  இஞ்சி சாறு அல்லது இஞ்சி டீ குடிப்பது வயிற்று பிரச்சனைகளை சரிசெய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ADVERTISEMENT

குளிர்ந்த பால் அல்லது தயிர் (Drinking cold milk or yogurt) : சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் குடிப்பது அசிடிட்டி பிரச்சனைக்கு விரைவாக நிவாரணம் அளிக்கிறது. தயிரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இவை குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன, செரிமானத்தையும் எளிதாக்குகின்றன. உணவுக்குப் பிறகு தயிர் அல்லது மோர் குடிப்பது வயிற்றை லேசாக உணர வைக்கும்.

பெருஞ்சீரகம் அல்லது ஓமம் (fennel or carom seeds relief acidity) :  இந்த விதைகளை சாப்பிடுவதும் அமிலத்தன்மையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரகம் அல்லது ஓமம் விதைகளை மென்று சாப்பிடுவது உடனடியாக வாயு, அசிடிட்டி பிரச்சனைகளை குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. சாப்பிட்ட பிறகு கனமான உணர்வையும், பசி அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. சாப்பிடும்போது குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, நன்றாக மென்று சாப்பிடுவதும் அமிலத்தன்மையை குறைக்க உதவும்.

ADVERTISEMENT

எலுமிச்சை மற்றும் தேன் கலவை (lemon with honey) : ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து குடிப்பது வயிற்றில் அமில அளவை சமன்படுத்த உதவுகிறது. இது சாப்பிட்ட பிறகு வரும் நெஞ்செரிச்சலை குறைக்க உதவுகிறது. செரிமான நடைமுறைகளை மேம்படுத்துகிறது.

காய்கறிகளை அதிகமாக சேர்க்க வேண்டும் : கீரை, பச்சை காய்கறிகள், பீற்றூட் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்றில் அமிலத்தை சமன்படுத்த உதவுகிறது. உணவுக்குப் பிறகு 5 அல்லது 10 நிமிடங்கள் லேசான நடைபயிற்சி செய்வது செரிமான செயல்முறைகளை விரிவுபடுத்துவதோடு வாயு உருவாகாமல் தடுக்கிறது. இதன்மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை குறையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share