கோடைக் கருமையில் இருந்து சருமப் பாதுகாப்பு : இயற்கை சன்ஸ்கீரின் தயாரிப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

Home remedies Sunscreens for protect skin from summer tan

கோடை கருமையில் இருந்து சருமத்தை பாதுகாக்க வீட்டு வைத்தியம் மூலம் தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன்களைப் (Sunscreens) பார்ப்போம்.

சுட்டெரிக்கும் கோடை வெயில் மற்றும் சருமத்தில் ஈரப்பதம் இல்லாததன் காரணமாக சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக கோடை வெயிலில் அதிக நேரம் இருப்பதாலோ அல்லது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது படுவதாலோ, சருமம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள அதிக மெலனின் நிறமியை உற்பத்தி செய்கிறது. இது சருமத்தின் நிறத்தைக் கருமையாக்குகிறது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் (Natural Sunscreens) பயன்படுத்துவது அவசியம். மேலும், சருமம் கருமையாதல் பிரச்சனையை நீக்குவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

ADVERTISEMENT

ஆனால், கடைகளில் கிடைக்கும் பல வகையான சன்ஸ்கிரீன்களில் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் அடங்கியுள்ளன. எனவே, வீட்டில் சமையலறையில் கிடைக்கும் சில இயற்கைப் பொருட்களைக் கொண்டு நீங்கள் ஒரு இயற்கையான சன்ஸ்கிரீனைத் தயாரிக்கலாம்.

கற்றாழை + தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல் சருமப் பிரச்சனைகளுக்கு ஒரு அற்புதமான தீர்வுகளைத் தருகிறது. கற்றாழை ஜெல் வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல் அல்லது கருமைக்கு தீர்வு அளிகிறது. தேங்காய் எண்ணெய் உடன் (Aloe vera and coconut oil paste) கற்றாழை ஜெல்லைக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்தைக் குளிர்ச்சியூட்டவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. மேலும், இது சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதிலும் திறம்படச் செயல்படுகிறது. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை சருமத்தை இதமாக்கும், ஈரப்பதமூட்டும் மற்றும் காயங்களை ஆற்றும்.

ADVERTISEMENT
வெள்ளரிக்காய் + ரோஸ் வாட்டர்

கோடைக் காலத்தில் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும கருமை அல்லது பழுப்பு நிறம் மற்றும் வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தணிப்பதற்கு வெள்ளரிக்காய் (Skin benefits cucumber) சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலவை ஒரு சிறந்த இயற்கை வீட்டு வைத்தியமாகும். வெள்ளரிக்காய்  சருமத்தைக் குளிர்விக்கவும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது, அதே சமயம் ரோஜா நீர் சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.

வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை (rose water) அதில் கலந்து கெட்டியான பசை போல மாற்ற வேண்டும். இந்தக் கலவையை முகம், கழுத்தின் பின்புறம் அல்லது கை கால்களில் தடவ வேண்டும். அரை மணி நேரம் காய்ந்த பிறகு உங்கள் முகத்தையும் கைகளையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2- 3 முறை இதனை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ADVERTISEMENT
சந்தனம் + மஞ்சள் விழுது

சந்தனப் பொடி, மஞ்சள் மற்றும் ரோஜா நீர் ஆகியவற்றின் கலவையானது, சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், வெயிலினால் ஏற்படும் கருமையைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ள ஒரு இயற்கை மருந்தாகும். ஒரு பாத்திரத்தில் சந்தனத் தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மென்மையான பசை (Sandalwood + turmeric paste) போல கலக்க வேண்டும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தாராளமாகப் பூசி 20 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் உங்கள் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை + கற்றாழை ஜெல்

எலுமிச்சை மற்றும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி இயற்கையான சன்ஸ்கிரீனையும் தயாரிக்கலாம். கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது (lemon for skin protect) சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் அரை எலுமிச்சை சாறு சேர்த்து, நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும்.  பிறகு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, தண்ணீரால் கழுவவும். வாரத்தில்  2 முறை இதனை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share