அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனையா?.. இந்த வீட்டு வைத்தியங்களை டிரைப் பண்ணுங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Home remedies for acidity heartburn gas and indigestion

அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு, அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் வீட்டு வைத்தியங்கள் குறித்துப் பார்ப்போம்.

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மோசமான உணவுப் பழக்கம், இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்வது ஆகியவை அன்றாட வழக்கமாகிவிட்டன. இவை காரணமாக அமிலத்தன்மை (acidity), நெஞ்செரிச்சல், வாயு, அஜீரணம், மற்றும் புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கான நாம் மாத்திரைகள், சிரப்களை எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கும். ஆனால், நமது சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டே விரைவில் நிவாரணம் காண முடியும். வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சமையலறை பொருட்கள் கொண்ட வீட்டு வைத்தியம் குறித்துப் பார்ப்போம்.

ADVERTISEMENT
செரிமானத்திற்கு உதவும் பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதில் அனெத்தோல் என்ற இயற்கையான சேர்மம் உள்ளது, இது வயிற்றுத் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. இதன்மூலம் வாயு மற்றும் வயிறு உப்புசத்தைக் குறைக்க முடியும். உணவுக்குப் பிறகு பெருஞ்சீரக விதைகளை மெல்லுவது அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் (Fennel helps digestion) குடிப்பது வயிற்றுக்கு இதமளிக்கவும் நெஞ்செரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது.

சீரகம்

சீரகம் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது என்றே சொல்லலாம். சீரகத்தில் உள்ள குமினல்டிஹைடு, செரிமான நொதிகளைச் செயல்படுத்தி, உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. முறையான செரிமானம் வயிற்றின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அமிலத் தன்மையையும் தணிக்கும். வாயுத் தொல்லை மற்றும் வயிறு கனமாக இருப்பதைப் போக்க, சீரக நீர் ஒரு பிரபலமான வீட்டு வைத்தியமாக உள்ளது. இரவு தூங்குவதற்கு முன்பு சீரகத் தண்ணீர் (Health Benefits of cumin) குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் தீரும்.

ADVERTISEMENT
அசிடிட்டி பிரச்சனையை குறைக்கும் இஞ்சி

மெதுவான செரிமானம்தான் பெரும்பாலும் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.இஞ்சியில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது வயிறு வேகமாக காலியாக உதவுவதோடு, உணவு வயிற்றில் தங்குவதையும் தடுக்கிறது. இஞ்சியை (Ginger reduces acidity) வெந்நீர், மூலிகை தேநீர் ஆகியவற்றில் கலந்து உட்கொள்வது அல்லது உணவில் மிதமான அளவில் சேர்த்துக்கொள்வது நமக்கு நன்மை அளிக்கிறது.

ஏலக்காய்

ஏலக்காய் செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் (Cardamom is beneficial for digestion) வயிற்று அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. உணவுக்குப் பிறகு ஏலக்காயை மெல்லுவது செரிமானத்தை மேம்படுத்தி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும். தேநீர் அல்லது பாலில் ஏலக்காயை கலந்து அருந்துவது சுவைமிக்கதாகவும் இதமானதாகவும் இருக்கும்.

ADVERTISEMENT
துளசி இலைகள்

துளசி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதில் யூஜெனால் (Benefits of Tulsi leaves) போன்ற இயற்கையான சேர்மங்கள் உள்ளன, அவை வயிற்றை அமைதிப்படுத்தவும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது. துளசி இலைகளைத் தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் துளசியை மென்று சாற்றை விழுங்கினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share