அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரம்!

Published On:

| By Kalai

தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை:

ADVERTISEMENT

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர்,  விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி  மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

04.08.2022:

வியாழனன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும்  ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

05.08.2022:

வெள்ளிக்கிழமை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி,   ஈரோடு மற்றும்  கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

06.08.2022:

சனியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.08.2022:

ஞாயிற்றுக்கிழமை (07.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான  மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

03.08.2022 மற்றும்  04.08.2022:  குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் பலத்தக்காற்று   மணிக்கு  50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள –  கர்நாடக கடலோர பகுதிகள்  மற்றும்   அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்   அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்  மற்றும்    ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

05.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்  மற்றும்   அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்   அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்  மற்றும்    ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கலை

ஆளுநர் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை… தீரன் சின்னமலைக்கு மரியாதை!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share