நடிகை பலாத்காரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவாக பேசியதற்கு சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் உ.வாசுகி, காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். he not only insult victim… condemns against seeman
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டாக பலாத்காரம் செஞ்சுவிட்ட மாதிரி எல்லாரும் கத்திகிட்டு இருக்கீங்க?” என சீமான் கூறியிருந்தார்.
தொடர்ந்து நேற்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான சீமானிடம் இரவு 10 மணி முதல் 11.15 மணி வரை விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போதும், “ஒரு பெண்ணை அப்படியே தூக்கிக்கொண்டு போய் கதற கதற வன்புணர்வு செய்த மாதிரி ஏன் இப்படி பேசுகிறீர்கள். விரும்பி தானே உறவு வைத்துக்கொண்டு போனவள் அவள்” என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
சீமானின் இந்த பேச்சு, தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை மட்டுமல்ல பெண் இனத்தையே அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் கருத்து தெரிவித்து வருகிறனர்.

சீமானின் பேச்சிற்கு தனியாக வழக்குப்பதிவு! he not only insult victim… condemns against seeman
இதுதொடர்பாக காங்கிரஸைச் சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி கூறுகையில், “சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.
பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை! அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும்.
இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு,பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை,செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரை நக்கல் செய்கிறார்! he not only insult victim… condemns against seeman
சிபிஎம் மூத்த தலைவர் உ.வாசுகி தனது பதிவில், ”கலப்படமற்ற அசலான குரூரமான ஆணாதிக்க மூளை சீமானுக்கு.. ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு… இத்தனை விசாரணைக்குப் பின்னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை (survivor) வேறு நக்கல் செய்கிறார், நாதக உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

வக்கிர புத்தி தவிர வேறு ஒன்றுமில்லை! he not only insult victim… condemns against seeman
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா வெளியிட்டுள்ள பதிவில், “தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார்.
விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.
சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்?.
நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா?
எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.
பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்?.
50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்.
பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா?
அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்.
சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது” என எம்.பி சுதா தெரிவித்துள்ளார்.
