போதை பொருள் வழக்கு: தவெக மாஜி நிர்வாகி பூபாலனின் கூட்டாளிக்கு சம்மன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியில் தவெக நிர்வாகி தொடர்புடைடைய இடங்களில் 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகியாக இருந்த பூபாலன் உள்ளிட்ட நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து டி.ஆர்.ஐ அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

137 கிலோ வரை மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா மற்றும் இச்சம்பவத்தின் முழுப் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், முன்னாள் தவெக நிர்வாகி பூபாலன் அவரது நண்பரான சுகன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், சுகனின் நண்பரான ராஜ்குமார் என்பவருக்கு தற்போது டி.ஆர்.ஐ (DRI) மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஜ்குமார் வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்தி வருவதோடு பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இச்சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராஜ்குமாருக்குச் சொந்தமான காரில்தான் இந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும், அதனால் இவர் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த சம்மனைப் பெறாமல் ராஜ்குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். மேலும், அதிரடியாகப் பிடியாணை மூலம் அவரைப் பிடித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

டி.ஆர்.ஐ அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இதில் உள்ள உண்மை நிலவரங்கள் தெரியவரும்.

மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா, குறிப்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இதில் தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் அவர்கள் அவருடன் நட்பு ரீதியான பழக்கங்கள் வைத்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share