விஜய் குறித்து பேச்சு… மேடையிலேயே கண்டித்த கனிமொழி.. திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

Published On:

| By Kavi

DMK-Chennai Police

தமிழக முதல்வர் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாக  திமுகவைச் சேர்ந்த சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக 95ஆவது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் தலைமையில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்  திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதில் திமுக எம்.பி.கனிமொழி , முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது  சுதா தீனதயாளன் முதல்வர் விஜய் குறித்து இழிவாக பேசியிருந்தார்.  உடனே மேடையில் பேசிய கனிமொழி எம்.பி,   ‘எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது’  என்று அறிவுறுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

திமுக வார்டு கவுன்சிலரின் பேச்சுக்கு  அமைச்சர் கீர்த்தனா, கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்தநிலையில் தவெக துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளி ஆகியோர் மீது  புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இந்தப் புகாரைப் பெற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share