சென்னை வெள்ளத்தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட சிபிஎம் வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் வெள்ளத்தடுப்பு குறித்து அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை தாமதமின்றி தவெக அரசு வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் அதையொட்டி வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தீவிரமாக விவாதிப்பதுமாக ஒவ்வொரு ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயினும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென்று கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன.

ADVERTISEMENT

இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இந்த குழு சமர்ப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அறிக்கை பல்வேறு கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் வசதிபடைத்தோரின் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதும் முக்கியமானது என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்படாத அந்த அறிக்கையை தற்போதைய ஆட்சியிலாவது வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை செலவழித்து நிபுணர்கள் தங்கள் உழைப்பையும், அறிவையும் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும்.

ADVERTISEMENT

எனவே, மாநில அரசாங்கம் உடனடியாக திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர, அவசியமான தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share