தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா திடீரென இன்று (அக்டோபர் 20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா 5,268 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில் கோவையில் கணவர் முருக சந்தரகுமாருடன் இன்று காலை கார்த்திகா கைது செய்யப்பட்டார். தாராபுரம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் பிரசாரம் செல்லும் சாலையில் போராட்டம் நடத்திய வழக்கில் கார்த்திகாவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் தமது எக்ஸ் பதில், “தேர்தல் நேரத்தில் போட்ட வழக்கிற்கு இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான வழக்கில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவரான தகவல் தொழில் நுட்பப் பாசறை மாநில பொறுப்பாளர் முருக சந்தரகுமார் ஆகியோரை அதிகாலை வீடு புகுந்து கைது செய்து எப்படியாவது நாம் தமிழர் கட்சியை ஒடுக்க வேண்டுமென காவல்துறையை ஏவி விடும் முதல்வர் விஜய்க்கு கடும் கண்டனங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
