ADVERTISEMENT

’கிராண்ட்ஸ்லாம்’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் ; யார் யாருக்கு வெற்றி ?

Published On:

| By Jegadeesh

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில்,

3-வது இடத்தில் இருப்பவரும், (2021) ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியவருமான மரியா சக்காரி

ADVERTISEMENT

6-3, 5-7, 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஸியு வாங்கிடம் தேல்வியடைந்தார்.

இதேபோல் (2021) ஆம் ஆண்டு 2-வது இடம் பெற்றவரும், உலக தரவரிசை பட்டியலில் 14 வது இடத்தில் உள்ளவருமான,

ADVERTISEMENT

கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் 3-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் 35 ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் லிட்மிலா சாம்சோனோவாவிடம் தோல்வியடைந்தார்.

நம்பர் ஒன் வீராங்கனை என்று அழைக்க கூடிய ‘ போலந்து நாட்டைச்சேர்ந்த இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கணை ஸ்லோன் டீபன்சை தோற்கடித்தார் .

ADVERTISEMENT
Grand Slam US Open Tennis

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2 வது சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்துர் ரின்டெர்கீச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த எமிலி நவாவை தோற்கடித்து 3 வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாஸ், இத்தாலியின் பெரேட்டினி , ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா , நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோரும் 2 வது சுற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆட்டங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share